search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவநிலை மாநாடு"

    • ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பங்கேற்க உலக தலைவர்கள் எகிப்து நாட்டில் குவிந்து வருகின்றனர்.
    • 2 வாரம் நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    கெய்ரோ:

    ஆர்டிக், அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி வருவதால் உலக நாடுகள் இதுவரை கண்டிராத பெரும் அபாயத்தை எதிர்கொள்ள இருப்பதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இதனால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.

    இதற்கிடையே, ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.

    50-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வரும் 18-ம் தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் பங்கேற்று பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகளையும், முன்னெடுப்புகளையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். நேற்று முதல் எகிப்தில் உலக தலைவர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பங்கேற்ற இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், கால நிலை மாற்றம் குறித்து விரைவாக செயல்பட வேண்டிய நேரம் இது என தெரிவித்தார். மேலும், காலநிலை நிதியத்திற்கு நாட்டின் அர்ப்பணிப்பாக 11.6 பில்லியன் பவுண்டுகளை வழங்கினார்.

    நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான விவசாயக் கொள்கை மற்றும் விவசாயத்தில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.
    லண்டன்:

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு வார நிகழ்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நிலையான வேளாண்மை குறித்த செயல்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

    விவசாயத்தை இன்னும் நிலையானதாகவும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாததாகவும் மாற்றுவதற்கான புதிய உறுதிமொழிகளை வகுப்பதற்கான இந்த செயல்திட்டத்தில் இந்தியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, உகாண்டா, வியட்நாம், ஜெர்மனி, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகள் கையெழுத்திட உள்ளன. 

    நிலையான வேளாண்மைக்கு மாறுவதற்கான நிலையான வேளாண் கொள்கை மற்றும் வேளாண்மையில் புதுமைக்கான உலகளாவிய செயல்திட்டம் ஆகியவை முக்கியமான உறுதி மொழிகள் ஆகும்.

    இந்த செயல்திட்டத்தில் கையெழுத்திடும் நாடுகள் தங்கள் நாடுகளில் வேளாண் கொள்கைகளை மிகவும் நிலையானதாகவும், மிக குறைவாக மாசுபடுத்துவதாகவும் மாற்றுவதற்கு புதிய உறுதிமொழிகளை வகுத்துள்ளன. நிலையான வேளாண்மைக்குத் தேவையான அறிவியலில் முதலீடு செய்வதற்கும், பருவநிலை மாற்றத்தில் இருந்து உணவுப் பொருட்களைப் பாதுகாப்பதற்கும் உறுதிமொழிகளை வகுத்துள்ளன.

    உலகத்தின் தலைவராக சீனா புதிய பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
    கிளாஸ்கோ:

    பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடந்து வருகிறது. உலகளாவிய வெப்பநிலையை குறைப்பதில் முக்கிய பங்காற்றப்போகிற இந்த மாநாட்டில், 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், சீன அதிபர் ஜின்பிங்கும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் தூதுக்குழுக்களை மட்டுமே அனுப்பி வைத்துள்ளனர்.இந்த மாநாட்டில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பேசியபோது இதை சாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகத்தின் தலைவராக சீனா புதிய பங்களிப்பு செய்ய முயற்சிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஜின்பிங் கலந்து கொள்ளாதது மாபெரும் தவறு.ரஷியாவில் காடு எரிகிறது. ஆனால் அந்த நாட்டின் அதிபர் இதில் வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார். புதினின் செயலாளர் திமிட்ரி பெஸ்கோவ், ரஷிய அதிபர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டார் என கடந்த மாதம் அறிவித்தபோது, அதற்கான காரணத்தைக்கூறவில்லை. பருவநிலை மாற்றம், ரஷியா முக்கிய முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
    புதுடெல்லி:

    இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 மாநாட்டைத் தொடர்ந்து வாடிகன் சிட்டி சென்ற பிரதமர் மோடி, போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். 

    பின்னர் அங்கிருந்து பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்தார். 

    இந்நிலையில், கிளாஸ்கோவில் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு நேற்று இரவு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று இந்தியா வந்து சேர்ந்தார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கிளாஸ்கோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.
    கிளாஸ்கோ:

    இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    ஜி20 மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார். கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் பருவநிலை மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பங்கேற்று உரையாற்றினார். மேலும், பல்வேறு நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்தார். 

    இந்நிலையில், கிளாஸ்கோவில் பருவநிலை மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார். 

    நமது பருவநிலை மாற்ற தழுவல் கொள்கைகளில், பாரம்பரிய நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
    கிளாஸ்கோ:

    பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் பருவநிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    சர்வதேச பருவநிலை மாற்ற விவாதத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம்,  நமது செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை மாற்றும் பருவநிலை மாற்ற தழுவலுக்கு அளிக்கவில்லை. பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இது அநீதி ஆகும்.

    பல பாரம்பரிய சமூகங்கள் இயற்கையோடு இயைந்து வாழும் அறிவு பெற்றுள்ளன. நமது தழுவல் கொள்கைகளில், பாரம்பரிய நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இந்த அறிவு அடுத்த தலைமுறைக்கு சென்றடைவதை உறுதி செய்ய, பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

    இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் விவசாயிகளுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. பயிர் செய்யும் முறை மாறுகிறது. சரியான பருவத்தில் பெய்யாத மழை, வெள்ளம் மற்றும் தொடர் புயல் பயிர்களை அழிகின்றன. குடிநீர் ஆதாரங்கள் முதல் மலிவு விலை வீடுகள் வரை அனைத்தும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான தன்மை கொண்டதாக மாற்றப்பட வேண்டும்.

    பருவநிலை மாற்ற தழுவலை நமது கொள்கைகளின் மிக முக்கியமான பகுதியாக மாற்ற வேண்டும். இந்தியாவில், அனைவருக்கும் குழாய் நீர், தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அனைவருக்கும் சுத்தமான சமையல் எரிபொருள் போன்ற கொள்கைகள், தேவைப்படுபவர்களுக்கு பருவநிலை மாற்ற தழுவலின் நன்மைகளை வழங்குவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.
    தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை, கற்பனையான ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பேசி எச்சரித்தார் போரிஸ் ஜான்சன்.
    கிளாஸ்கோ:

    பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை துவக்கி வைத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார். அப்போது, உலகமானது, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவை முன்கூட்டியே எச்சரிக்கும் டூம்ஸ்டே சாதனத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை, கற்பனையான ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பேசிய போரிஸ் ஜான்சன்,  கிரகத்தை அழிக்கும் ஒரு வெடிகுண்டுடன் கட்டப்பட்ட ஜேம்ஸ் பாண்ட், அதை செயலிழக்க வைக்க முயற்சிப்பதாகவும், தற்போது நாமும் தோராயமாக அதே நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

    ‘இப்போது டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கியது உண்மைதான், கற்பனையல்ல. நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருக்கிறது. மேலும் இவை அனைத்தும் கிளாஸ்கோவில் நிலக்கரி மூலம் இயங்கும் ஜேம்ஸ் வாட்டின் நீராவி இயந்திரத்தில் தொடங்கியது. பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது’ என்று உலக நாடுகளின் தலைவர்களை கேட்டுக்கொண்டார் போரிஸ் ஜான்சன்.
    கிளாஸ்கோ நகரில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
    கிளாஸ்கோ:

    இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நேற்று முடிவுக்கு வந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

    இதற்கிடையே, ஜி20 மாநாடு முடிந்து பிரதமர் நரேந்திர மோடி பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு புறப்பட்டுச் சென்றார்.

    கிளாஸ்கோ நகரில் நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் பருவநிலை மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர். 

    இந்நிலையில், ரோமில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி கிளாஸ்கோ சென்றடைந்தார். அங்கு அவருக்கு தூதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் இருந்து ஓட்டல் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்கு காத்திருந்த இந்தியர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். 

    ×